மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :2989 days ago
பொங்கலூர் : பொங்கலூர் அருகே மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று நடைபெற்றது. மழை பெய்ய வேண்டியும், டெங்கு மற்றும் விஷ காய்ச்சல் தீர வேண்டியும், பொங்கலூர், தாயம்பாளையம் அரசு பணியாளர் நகரில் அமைந்துள்ள தென்சிருஷ்டி சமஸ்தானத்தில், மகா யாகம் நடந்தது. திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டு, மழைப்பதிகம் பாடப்பட்டது. கோ பூஜை, ராகு, கேது, குரு மற்றும் சனி பெயர்ச்சியால் ஏற்படும் இன்னல் தீர பரிகார யாகம் ஆகியவை நடந்தது.இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிக்கு தென் சிருஷ்டி சமஸ்தான நிறுவன தலைவர் சாய் குமரன் தலைமை வகித்தார். பொருளாளர் சரளாதேவி, தென் சேரிமலை ஆதீனம் திருநாவுக்கரசர் திருமடம் முத்துசிவராமசாமி அடிகள், சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.