உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் பூச்சாட்டு விழா

பொங்கல் பூச்சாட்டு விழா

திருப்பூர்: திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம், எம்.எஸ்., நகர் கருப்பராயன், கன்னிமார் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா, விசேஷ பூஜைகளுடன் நடந்தது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் ரவுண்டானா அருகே, நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன், கன்னிமார், வீரமாத்தியம்மன், வேட்டைக்காரன் கோவில், ஏரிக்கரையில் அமைந்துள்ளது; இங்கு, கடந்த வாரம் பூச்சாட்டப்பட்டது. கொடுமுடியில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர்.நேற்று காலை கருப்பராயன், கன்னிமார் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்கார மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தன; பெண்கள், பொங்கல் வைத்து படையலிட்டனர். முன்னோர் வழக்கப்படி, ஆணியுள்ள காலணி, அரிவாளுடன், பூசாரி கோவிலை சுற்றி வந்தார். அதை தொடர்ந்து நேர்த்திக்கடனாக, கிடாய்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டன. மதியம் உச்சிகால பூஜை நடந்தது; சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !