உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம் பஞ்சவடீ கோவிலில் நடை அடைப்பு

சந்திர கிரகணம் பஞ்சவடீ கோவிலில் நடை அடைப்பு

புதுச்சேரி: பஞ்சவடீ கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று (7ம் தேதி) மாலை நடை அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று மாலை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், அனைத்து சன்னதிகளின் நடைகள் அடைக்கப்படுகிறது. அன்று மாலை 4:30 மணி முதல் தரிசனம் கிடையாது. புண்ணிய பூஜைகளுக்கு பின், 8ம் தேதி காலை 7:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இத்தகவலை பஞ்சவடீ பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !