வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா
ADDED :1 hours ago
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் புறப்பாடாகி சன்னதி வீதி வழியே தேரடி மைதானத்திற்கு வந்தார். அங்கு ஏராளமான பக்தர்கள் மத்தியில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. ஏற்பாட்டினை மண்டகப்படிதாரர் டாக்டர் ஜே.சி.சேகர் , தக்கார் தங்கலதா, செயல்அலுவலர் முத்துலட்சுமி, ஊழியர்கள் செய்திருந்தனர்.