உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

செல்வியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வியம்மன் கோயிலில் பறவை காவடி, 18 அடி அலகு குத்தி, ஆயிரம் கண்பானை, பால்குடத்துடன் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்துார் வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் 41 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஜூலை 29 ல் காப்புக் கட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. திருவிளக்கு பூஜை, பள்ளி மாணவர்களின் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி, அன்னதானம், அக்னிசட்டி, சக்தி கரகம் எடுத்தல், வளையல், சிம்ம அலங்காரத்தில் செல்வியம்மன் வீதிஉலா, பக்தர்கள் பால்குடம் எடுத்தலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று பால்குடத்துடன் பூக்குழி இறங்கியும், 16 அடி அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு பால்குடம், சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, பக்தர்கள் பொங்கல் வைத்தனர். ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் வடமலையான், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், துணை தலைவர் ராமமூர்த்தி, நிர்வாக கமிட்டி உறுப்பினர் மாடசாமி உட்பட செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !