கோணசமுத்திரம் சாமுண்டீஸ்வரியம்மனுக்கு பாலாபிஷேகம்
பள்ளிப்பட்டு: கோணசமுத்திரம், சாமுண்டீஸ்வரியம்மனுக்கு,நேற்று, ஆடிதிருவிழாவை ஒட்டி, திரளான பெண்கள், பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று, பாலாபிஷேகம் நடத்தினர். மாலையில், உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். பள்ளிப்பட்டு அடுத்த, கோணசமுத்திரம் கிராமத்தில், மண்டியம்மன் எனப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி திருவிழாவை ஒட்டி, நேற்று காலை , திரளான பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். காலை , 10:00 ம ணிக்கு துவங்கிய ஊர்வலம், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பகல், 12:00 மணிக்கு. அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில் உள்ள சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் வளாகத்தை அடைந்தது. பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் படையல் வைத்தனர். பின், மாலை , 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். வீடு தோறும் அம்மனுக்கு ஆரத்தி எடுத்து, அம்மனை வணங்கினர். இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை கன்னியம்மன், பெருமாநல்லுார் ஓசூரம்மன் கோவில்களிலும், நேற்று, பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடி திருவிழாவை கொண்டாடினர்.