உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பவன முருகனுக்கு 15ல் பால்குட அபிஷேகம்

கடம்பவன முருகனுக்கு 15ல் பால்குட அபிஷேகம்

வெண்மனம்புதுார்: வெண்மனம்புதுார் கிராமத்தில் உள்ள, கடம்பவன முருகன் கோவிலில், வரும், 15ல், பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுாரில் அமைந்துள்ளது, கடம்பவன முருகன் கோவில். இங்கு, மூன்றாம் ஆண்டு ஆடிக்கிருத்திகை பால்குட அபிஷேகம், வரும், 15ல் நடைபெற உள்ளது. முன்னதாக, 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமமும், சண்முக ஹோமமும், அதை தொடர்ந்து, பஞ்சலோக கவச பிரதிஷ்டையும் நடைபெறும். மறுநாள், 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு, சங்காபிஷேகமும், அதை தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.இதன்பின், 15ம் தேதி காலை, 9:30 மணிக்கு, சூரியம்மன் கோவிலிலிருந்து, பால்குட ஊர்வலம் புறப்படுதலும், அதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, கடம்பவன முருகனுக்கு, பால்குட அபிஷேகமும், பின், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத கடம்பவ முருகன் ஒய்யாலி சேவையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !