மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2983 days ago
ஊத்துக்கோட்டை: மாரியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். பூண்டி ஒன்றியம், நம்பாக்கம் காலனியில் உள்ளது மாரியம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, 4ம் தேதி விழா துவங்கியது. முதல் நாள் பக்தர்கள் பால் குடம் ஏந்திச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு ஆராதனை செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா நடந்தது. இதில் கிராமத்தில் உள்ள, 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.