தி.மலை கோவிலில் ரூ.72.82 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :2986 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும், கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம். ஆடி மாத பவுர்ணமி முடிந்ததை அடுத்து, நேற்று, கோவிலில் உள்ள உண்டியல்கள் இணை ஆணையர் ஜெகன்நாதன் முன்னிலையில் திறக்கப்பட்டன. கோவில் உழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, 200 பேர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், காணிக்கையாக, 72 லட்சத்து, 82 ஆயிரத்து, 807 ரூபாயும், 175 கிராம் தங்கம், 1,490 கிராம் வெள்ளியும் இருந்தது.