முத்து மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழா
ADDED :2986 days ago
உத்திரமேரூர்: இரும்பேடு கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் அடுத்த இரும்பேடு கிராமத்தில், பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆடி மாத கூழ் வார்த்தல் விழாவிற்காக, நேற்று முன்தினம் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின், தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அப்போது, பக்தர்கள் தேரின் வடத்தை முதுகில் குத்தி, தேர் இழுத்தும், அந்தரத்தில் தொங்கிய படிஅம்மனுக்கு மாலைஅணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதியுலா வந்தது. 2:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.