திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்
ADDED :2991 days ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழாவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த ஆக.,1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் அம்மன் பல்வேறு சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாநடந்தது. பத்தாம் திருவிழாவில், அதிகாலை வெயிலுகந்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு அம்மன் தேரோட்டத்திற்கு எழுந்தருளினார்.தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் வலம் வந்தது.