கழுகூர் அழகுநாச்சியம்மன் கோவில் திருவிழா
ADDED :2990 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, கழுகூர் அழகுநாச்சியம்மன், சந்தனக் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா, 13 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. முதல்நாளான நேற்று முன்தினம், குதிரைகளில் முக்கியஸ்தர்கள் ஐவர், வேளார் வீட்டிற்கு சென்றனர். அங்கு, தயார் நிலையில் இருந்த அரண்மனை குதிரை, உருவங்கள், காளை மற்றும் பட்டி வாகனங்களை தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் எடுத்துச் சென்றனர். நேற்று, பட்டிப்பொங்கல் வைத்து, கிடாவெட்டி நேர்த்திக்கடன் செய்து வழிபாடு செய்தனர். இன்று இரவு அழகு நாச்சியம்மனுக்கு சிறப்பு பாவாடை அபி ?ஷகம் நடக்கிறது. நாளை, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், பூசாரிகளுக்கு காப்பு அவிழ்ப்பு, மஞ்சள் நீராடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், திருச்சி, கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.