உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆடி வெள்ளி விழா

சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆடி வெள்ளி விழா

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் சுவாமி கோவிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, நாளை, 18 ஆயிரம் பேருக்கு வளையல்கள் வழங்கப்படுகின்றன. சேலம், சுகவனேஸ்வரர் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு நாளை மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. 16 வகையான உபசாரத்துடன் வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்கல இசை முழங்க, அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட, 18 ஆயிரம் வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !