காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் கோபுரத்தில் செடிகள்
ADDED :3063 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் கோபுரத்தில் வளரும் செடிகளால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளது.இக்கோவிலில், 2012, ஜூலை, 5ம் தேதி மஹா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடந்தது. தற்போது, கிழக்கு, மேற்கு ராஜகோபுரம், தொண்டரடி பொடிவாசல் கோபுரம், பெருமாள் சன்னிதி கோபுரங்களில் செடிகள் முளைத்துள்ளன.இவற்றின் வேர் பகுதியால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே, செடியாக இருக்கும் போதே அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.