உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் சாய் பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர் சாய் பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருவள்ளூர்: சாய்பாபா கோவிலில், நேற்று, ஆனந்த சாய்ராம், பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாயிபாபா சன்னதியில், நேற்று, காலை, 9:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாயிபாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், நேற்று இரவு, தீபோற்சவம் நடந்தது. தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !