உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகம்பிரியாள் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

பாகம்பிரியாள் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

திருவாடானை, பாகம்பிரியாள் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக சென்றனர். ஆக.14ல் 43 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெறும். வர்த்தக சங்கத்தினரால் நடத்தப்படும் இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில், பாகம்பிரியாள் தாயார் வீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !