உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார்கோயில் எருது கட்டு விழா

அய்யனார்கோயில் எருது கட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் சாத்தையனார் கோயில் ஆடி விழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடைபெற்றது. போட்டியில் பங்கு பெற்ற காளைகளின் கழுத்தில் வடம் கட்டப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை உள்ளூர் இளைஞர்கள் அடக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சாத்தையனாருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை பாரனுார் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !