நிரதலமுடைய சோணையா சுவாமி கோயிலில் பொங்கல் விழா
ADDED :3090 days ago
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தை, தினசரி மற்றும் இலை வியாபாரிகள் சார்பில் 28ம் ஆண்டு பொங்கல் பூஜை விழா நிரதலமுடைய சோணையா சுவாமி கோயிலில் நடந்தது. இதையொட்டி சோணையா சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டும்,பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டும் சிறப்பு அபிேஷகங்களும், தீபஆராதனைகளும் நடந்தன. முன்னதாக வாரச்சந்தை வளாகத்திற்குள் அன்னதானம் நடந்தது.மானாமதுரை உச்சி மாகாளி அம்மன் கோயிலில் 26ம் ஆண்டு பொங்கல் மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிேஷகமும் நடந்தது.மானாமதுரை நாகலிங்கம் நகரிலுள்ள மெக்கநாச்சி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது.