மதுரையில் ராமானுஜர் விழா
மதுரை: மதுரையில் சத்குரு சங்கீத சமாஜம் மற்றும் கோவை எம்பெருமானார் தரிசன சபை சார்பில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சங்கீத, நாட்டிய, நாடக விழா நடந்தது.சமாஜ செயலாளர் ராஜாராம் வரவேற்றார். சீனிவாச வெங்கடாச்சார்யா தலைமை வகித்தார். அழகர்கோயில் கோமடம் சுவாமி, திருக்குறுங்குடி ஸ்ரீதரன், மதுரை ராகவன் முன்னிலை வகித்தனர். அரவிந்த லோசனன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ’ஆயிரமாவது ஆண்டு கண்டருளும் காரேய் கருணை ராமானுஜர்’ என்ற பொருளில் மாணவிகளின்நாட்டிய, நாடகம் மற்றும் திருகல்யாணம், சயன சேவை, திருமலை வேங்கடநாதர் வைபவம் உட்பட ராமானுஜரின் அநுகார வைபவங்கள் நடந்தன. அனந்த ராமகிருஷ்ண சுவாமி தம்பதியர் பரிசு வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர், சம்பத்குமார், தேவ்யாச சுதர்சனன், பராசர பத்ரிநாராயணன், திருகோஷ்டியூர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். சபை நிர்வாகிகள் நம்மாழ்வார், மாதவன், சமாஜ நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜெகன், பைரவன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.