ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் ஆடிப்பூர கஞ்சி கலைய ஊர்வலம்
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் சார்பில் 8 ம் ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி, கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. விழாவை யொட்டி, நேற்று காலை 5.00 மணிக்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 8.00 மணிக்கு திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து புறப்பட்ட கஞ்சி ஊர்வலத்தை மாவட்ட தலைவர் ஜெயபாலன் துவக்கி வைத்தார். இதில் நுாற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிகலையம், தீச்சட்டி ஏந்தி கொண்டு சென்றனர்.
ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தை சென்றடைந்த பிறகு நடந்த கஞ்சி வார்த்தலை தொடர்ந்து, 11.00 மணிக்கு நடந்த பாலாபிஷேகத்தை மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதையடுத்து, நடைபெற்ற அன்னதானத்தை தெற்கு தலைவர் பழனிசாமி, சக்திபீட தலைவர் சீத்தாராமன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், நிர்வாகிகள் மணிவாசகம், அரசு வழக்கறிஞர் எத்திராஜீலு, துணை தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, வட்ட தலைவர் பழனி, ஜோதி, ரங்கநாதன், ஏழுமலை, பாண்டு, பட்டுராஜா, பால்ராஜ், குப்பன், வேள்விக்குழு வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.