உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தவள்ளியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு ஆடி திருவிழா

சந்தவள்ளியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு ஆடி திருவிழா

ஊத்துக்கோட்டை : சந்தவள்ளியம்மன் கோவிலில், 21ம் ஆண்டு ஆடித்திருவிழா, வரும், 18ம் தேதி துவங்குகிறது. பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ளது, சந்தவள்ளியம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். வரும், 18ம் தேதி, 21ம் ஆண்டு ஆடி உற்சவம் துவங்குகிறது. அன்று காலை, 8:30 மணிக்கு பால்குடம் எடுத்தல், மறுநாள், காலை, 11:30 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.வரும், 20ம் தேதி காலை, 7:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து, கூழ்வார்த்தல், பொங்கல் படைத்தல், அம்மன் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !