உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் கொண்டாட்டம்

சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடி உற்சவத்துடன் களைகட்டியது.ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாள். இந்த நாள், இந்துக்களின் பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சென்னை, சோழிங்கநல்லூர், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று மாலை, 3:00 மணிக்கு கிருஷ்ண யாகம் நடத்தப்பட்டது.
இன்று காலை முதல், நள்ளிரவு வரை, சிறப்பு தரிசனம் நடக்கிறது. இரவு, 10:30 மணி முதல், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, 90 ஆண்டுகள் பழமையான வேணுகோபால சுவாமி கோவிலில், ஜூலை முதல், தினமும் கச்சேரிகள், உபன்யாசங்கள் நடந்து வருகின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று இரவு, 7:30 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின், கிருஷ்ணன ஜனனம் சொற்பொழிவு நடந்தது. மேலும் முத்தங்கி சேவை அலங்காரத்துடன், சுவாமி அருள்பாலித்தார்.

சென்னை, கவுடியா மடத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று விழா நடக்கிறது. சென்னை, மயிலாப்பூர் நந்தலாலாவில், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையுடன் விழா துவங்கியது. மாலையில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நேற்று மாலை, கிருஷ்ண ஜனன வைபவம் நடந்தது.

இன்று, அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது. இதேபோல, பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன.சென்னை நகரில், பலரதுவீடுகளில் வீதி முதல், பூஜை அறை வரை, கிருஷ்ணர் கால் பாதம் வைத்து அலங்கரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !