உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - குரு பார்க்கிறார் குறை தீர்க்கிறார்

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - குரு பார்க்கிறார் குறை தீர்க்கிறார்

விடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்.  உடல்நலக்குறைவு ஏற்படலாம். மனதில் தளர்ச்சி உருவாகும். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 9-ம் பார்வை சாதகமாக இருக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்பர். குருபார்வையால் குறை அனைத்தும் தீரும். அவர் 2018 பிப்.14-ல் 7-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுவது உயர்வான நிலையாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சுப நிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ராகு 3-ம் இடமான கடகத்தில் இருப்பதால் செயலில் வெற்றி, பொருளாதார வளம் பெருகும். கேது 9-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொருள் இழப்பு ஏற்படலாம்.
சனி பகவான்  7-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை உண்டாகும். 2017 டிச. 19- ல் விருச்சிகத்தில் இருந்து  தனுசு ராசிக்கு மாறுகிறார். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

இனி  காலவாரியாக விரிவான பலனைக் காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
குருவால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சி கைகூட தாமதம் ஆகலாம். குருபகவானின் 9-ம் பார்வையால் குடும்பத்தேவை பூர்த்தியாகும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் வளர்ச்சி காணலாம். கேதுவால் எதிரி தொல்லை ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில்  கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  லாபம் சீராக இருக்கும்.  பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  கோரிக்கை நிறைவேறுவதில் தாமதமாகும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த புகழ்  கிடைக்காது.  அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டிஇருக்கும். ஆனால் முயற்சிக்கான பலன் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள் பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகளில் நல்ல மகசூல் காணலாம். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். பெண்களுக்கு உறவினர் வகையில்
வீண் பகையை உருவாக்குவார். அக்கம் பக்கத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் குருபகவான் 7-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பர வசதி பெருகும். பெரியோர் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்
வருகையால் நன்மை ஏற்படும். குருபகவானின் 5-ம்பார்வை மூலம்  பொருளாதார வளம் மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.  ராகுவால் பகைவர் தொல்லை குறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் பெறும்.

பணியாளர்களுக்கு  அதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  மீண்டும் ஒன்று சேருவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  ஏப்.9-  முதல் அக்.3- வரை வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம்  கிடைக்க பெறுவர்.  ஏப். 9- க்குப் பிறகு விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.

மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.  ஏப். 9- க்கு பிறகு அதிக முயற்சி தேவைப்படும்.

விவசாயிகளுக்கு பயறு, பழம், காய்கறி வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு
போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்களுக்கு  கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் உண்டாகும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும்.

பரிகாரம்:
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
* தேய்பிறை சதுர்த்தியில் விநாயகருக்கு அர்ச்சனை
* சனிக்கிழமையில் காகத்திற்கு அன்னமிடுதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !