உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - முயற்சிக்கேற்ற வளர்ச்சி

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - முயற்சிக்கேற்ற வளர்ச்சி

நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 3-ம் இடமான துலாமிற்கு செல்வது சிறப்பானதல்ல.  இதனால்  எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காமல் போகலாம். செயலில் தடைகள் குறுக்கிடலாம். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை உண்டாகும்.  
முயற்சிக்கேற்ப வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள். 2018 பிப். 14ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவதும் சுமாரான நிலையே.  மன உளைச்சல், உறவினர் பகை உருவாகலாம்.
ராகு 12-ம் இடமான கடகத்தில் இருப்பதால் பண விரயம் ஏற்படலாம். கேது 6-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொன், பொருள் சேரும். செயலில் வெற்றி உண்டாகும்.

சனிபகவான்  4-ம் இடத்தில் இருப்பது நல்லதல்ல. ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். 2017 டிச. 19ல் அவர் தனுசு ராசிக்கு மாறுவதால் குடும்ப பிரச்னை, மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம்.2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
திட்டமிட்ட செயல் நிறைவேற அதிக முயற்சி தேவைப்படும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.  குருவின்  பார்வை பலத்தால் குடும்ப தேவை பூர்த்தியாகும்.  
கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் நெருக்கம் உண்டாகும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு என்றாலும்  தடைகளை கடக்க வேண்டியிருக்கும்.

தொழில், வியாபாரத்தில்  பிறரை நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில்  சலுகை எதிர்பார்க்க முடியாது. வெளியூர் பயணம் மூலம் ஓரளவு ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெறலாம்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவை. பெற்றோர் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு வகைகள் மூலம் ஓரளவு மகசூல் பெறுவர்.  கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் குருவின் பார்வை பலத்தால் நன்மை காண்பர்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் உறவினர் வகையில் வீண் பகை உருவாகலாம்.  புதிய முயற்சியில் தடைகளைச் சந்திக்க நேரிடும்.  ஏப்.9- முதல் அக்.3- வரை நன்மையை எதிர்பார்க்கலாம்.

சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்-, மனைவி இடையே அன்பு சிறக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். ஆனால் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வுக்குதடையிருக்காது. அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே கிடைக்கும்.  

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  ஒப்பந்தம்
பெறுவதில் இழுபறி உண்டாகும்.  ஏப்.9க்கு பின் வளர்ச்சி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த  பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.  

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.  சகோதர வழியில் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள்  கடினமாக பாடுபட வேண்டியிருக்கும்.

பரிகாரம்:
*  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை
*  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்
*  தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !