ராஜயோக வாழ்வு தருபவர்
ADDED :3026 days ago
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவான் அருள்பாலிக்கிறார்.
பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது, இங்கிருந்த ஒரு மேடான பகுதியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். திட்டை என்றால் மேடு. இங்குள்ள உலகாம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் குருபகவானுக்கு சன்னதி உள்ளது. இவர், ராஜ யோகம் தருபவர் என்பதால் ராஜகுரு எனப்படுகிறார். கிரகங்களில் குருபகவானே திருமண, புத்திர பாக்கியம், செல்வம் தரும் தனகாரகராக விளங்குகிறார். எனவே தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
தொடர்புக்கு: 04362 – 252 858.