அவளும் என் அன்னையே!
ADDED :3026 days ago
சீதை தன் கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தாள். அப்போது, சிவபெருமான் தசரதரை சொர்க்கத்திலிருந்து அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த தசரதர், ராமனைக் கட்டித் தழுவி,“ராமா! கைகேயி என்னிடம் பெற்ற வரத்தின்போது, நெஞ்சில் கூரியவேல் தைத்தது போலிருந்தது. அன்று ஏற்பட்ட வலி இன்று உன் காந்தக்கல் மேனியைத் தழுவிய பிறகே நீங்கியது,”என்றார். விண்ணுலம் சென்றும் கூட, தசரதருக்கு கைகேயி, பரதன் இருவரையும் மன்னிக்க மனம் இல்லை. ஆனால், ராமரோ இது தான் சமயம் என்று தந்தையிடம் வரம் கேட்டார். ‘நீங்கள் பரதனையும், கைகையியையும் மன்னிக்க வேண்டும்,” என வேண்டினார். பரதனை மன்னிக்க சம்மதித்த தசரதர், கைகேயி விஷயத்தில் தயங்கினார். ஆனாலும், ராமர் போராடி தந்தையின் மனதை மாற்றினார். தான் காட்டுக்குச் செல்ல காரணமானவள் மீதும் ராமர் காட்டிய பாசம் கண்டு மக்கள் நெகிழ்ந்து போயினர்.