உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லிகேஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

மல்லிகேஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

மாமல்லபுரம் : மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலில், மண்டல அபிஷேகம் நிறைவடைந்தது. மாமல்லபுரத்தில், மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் உள்ள இக்கோவில், திருப்பணிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, ஜூலை, 6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தினமும் நடந்த மண்டல அபிஷேகம், நேற்றுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு, சுவாமி, அம்பாளுக்கு, 108 வலம்புரி சங்குகள் வழிபாடு துவக்கி, 11:30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கிராமிய கலைகளுடன், ரிஷப வாகனத்தில், சுவாமி, அம்பாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !