உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஊத்துக்கோட்டை : பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட வரசித்திவிநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது வரசித்தி விநாயகர் கோவில். பணிகள் முடிந்து, நேற்று காலை, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 21ம் தேதி, மதியம், 3:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ஆலயசுத்தி, யாகசாலை பிரவேசம், கணபதி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் 22ம் தேதி, காலை, 10:30. மணிக்கு, கோ பூஜை, தனபூஜை, தான்யபூஜை, அங்குரார்ப்பணம், கங்கா பூஜை, கரிவலம் வருதல், பிம்பசுத்தி, கணபதி மூல மந்திர ஹோமம், இரவு, 8:00 மணிக்கு சிலை பிரதிஷ்டை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, காலை, 7:00 மணிக்கு, சகஸ்ரநாமபாராயணம், விசேஷ திரவியம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, திருஷ்டி சுத்தி, யாத்ரா தானம், கலச புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளுடன், 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !