உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தியூர் தம்பிக்கலை அய்யன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

அந்தியூர் தம்பிக்கலை அய்யன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்

அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள, பொதியாமூப்பனூரில் தம்பிக்கலை அய்யன் கோவில் தேர்த் திருவிழா கடந்த, 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு மேல் மடப்பள்ளியில் இருந்து தம்பிக்கலை அய்யன், மாடசாமி, கருப்புசாமி ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர், பக்தர்கள் தோளில் சுமந்து தேரை கோவிலுக்கு தூக்கி வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பெரிய மண் பானையில், அரிசி போட்டு கஞ்சி காய்ச்சப்பட்டது. பின்னர், பூசாரி தென்னம்பாளையை கஞ்சி பானையில் விட்டு, அதை எடுத்து பக்தர்கள் மீது தெளித்தார். கஞ்சி படும் பக்தர்களுக்கு ஆண்டு முழுவதும், எவ்வித தீய வினையும் தங்களை நெருங்காது என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், கஞ்சியை பிரசாதமாக வாங்கி சென்றனர். பின்னர், 11:00 மணிக்கு பரன் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நாளை இரவு வாண வேடிக்கையுடன் விழா முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !