உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜய கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

விஜய கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

அம்மாபேட்டை: பவானி, குப்பிச்சிப்பாளையம், விஜயகணபதி கோவில், கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி, குப்பிச்சிப்பாளையம் கிராமம், பெரிய வாய்க்கால் கரையில், விஜயகணபதி, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கெஜலட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோவில், புதியதாக கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலையில் இரண்டாம் கால யாக வேள்வியுடன் பூஜை துவங்கியது. பின் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபி?ஷகம் நடந்தது. குப்பிச்சிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

* ஈரோடு, வ.உ.சி., பூங்கா அருகே, வீரபத்திர வீதியில் செல்வ விநாயகர் கோவில், கும்பாபி?ஷ விழா நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை, கோவில் கோபுர கலசத்துக்கு ஊற்றி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதை தொடர்ந்து சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !