பட்டத்தளச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2999 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மணவாசி பட்டத்தளச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக தீர்த்தக் குடம் எடுத்து வந்து முதற்கால பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட பட்டத்தளச்சி அம்மன் மற்றம் விநாயகர் கோவில் விமான கலசங்களுக்கு, புனித நீர் உற்றி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.