உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் 1,008 சங்காபிஷேக விழா

கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் 1,008 சங்காபிஷேக விழா

நாமக்கல்: ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில், ஆவணி சஷ்டியை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடந்தது. சேந்தமங்கலம் தாலுகா, ரெட்டிப்பட்டியில், கந்தகிரி மலையின் மேல், பழனியாண்டவர் கோவில் உள்ளது. தைப்பூசம், மாதாந்திர கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். நேற்று முன்தினம் இரவு, ஆவணி சஷ்டி விழா நடந்தது. இதில், 1,008 சங்குகளில், தீர்த்தம் நிரப்பி, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்து, சுவாமிக்கு அபி?ஷகம் நடந்தது. சுவாமி வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா குழு சார்பில், ’ஓம் முருகா’ என்ற மெகா சைஸ் மின்விளக்கு வழங்கி, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். நிகழ்சியை விழாக்குழுவினர், பக்தர்கள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !