இடத்துக்கு இடம் மாறுதே....!
ADDED :3072 days ago
வழிபாட்டில் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் ஜபிப்பது அல்லது அந்த தெய்வத்திற்குரிய அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம், ஸ்தோத்திரங்களை படிப்பது அவசியம். ஒருவர் ஜபம் எங்கு செய்கிறாரோ அதை பொறுத்து பலன் வித்தியாசமாகும். வீட்டில் ஜபித்தால் ஒரு மடங்கும், ஆறு, குளம், கிணறு என தண்ணீருள்ள இடத்தில் ஜபித்தால் இரு மடங்கும், மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து சொன்னால் 100 மடங்கும், யாகம், ஹோமத்தில் அக்னி வளர்த்து ஜபித்தால் ஆயிரம் மடங்கும், புண்ணிய ஸ்தலங்கள், கர்ப்ப கிரகம் ஆகிய இடங்களில் ஜபிக்க கோடி மடங்கும் பலன் உண்டாகும்.