உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நூற்றுக்கு நூறு!

நூற்றுக்கு நூறு!

காடு, மேடு என நடந்து வந்த அவ்வைப் பாட்டி களைப்பின்மிகுதியால் சோர்ந்திருந்தார். எதிர்ப்பட்ட ஒரு கோயில் முன், காலை நீட்டி அமர்ந்தார்.  அவரின் காலுக்கு நேராக சிவபெருமான் சந்நிதி இருந்தது.இதைக் கண்ட பக்தர் ஒருவர், பாட்டி, உனக்கு வயதாகிப் போனது தான் மிச்சம்! எந்த திசை  நோக்கி கால் நீட்ட வேண்டும் என்று கூட தெரியவில்லையே! என்று கோபித்தார். நிமிர்ந்த அவ்வையார், ஏனப்பா! கோபப்படுகிறாய்? கடவுள்  இல்லாத திசையைக் காட்டு. அந்தப் பக்கமாக காலை நீட்டிக் கொள்கிறேன்! என்று பதிலளித்தார். ஆம்! அவ்வையின் சொல் நுõற்றுக்கு நுõறு  உண்மை. கடவுள் இல்லாத திசையே இல்லை. எல்லாத் திசைகளும் அவருக்குரியதே. அவர் எங்கும் நிறைந்துஇருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !