உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

சேலம் மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

சேலம்: சேலத்தில் உள்ள கோவில்களில், செப்., 2ல் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிறது. காலை, 9:30 மணிக்கு, குரு பகவான் சித்திரை, 2ம் பாதம் கன்னி ராசியில் இருந்து, சித்திரை நட்சத்திரம், 3ம் பாதம் துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, ஸ்வர்ணபுரியில் உள்ள ஸ்வர்ண விநாயகர் கோவிலில், காலை, 6:30 மணிக்கு கணபதி, நவக்கிரஹம், ராசி, குரு தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் ஆகிய ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி ஆகியவை நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு குரு, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம் நடக்கிறது. அதேபோல் கோட்டை அழகிரிநாதர், குமரகுரு சுப்ரமணியர், தேர்வீதி ராஜகணபதி, சுகவனேஸ்வரர், காவடி பழநி ஆண்டவர், டவுன் கன்னிகா பரமேஸ்வரி, ஐயப்பா ஆசிரமம் ஆகிய இடங்களில் விழா கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !