அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3002 days ago
புத்திரன்கோட்டை;புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் கோவில் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. செய்யூர் தாலுகா, புத்திரன்கோட்டை, அகத்திய மகரிஷியின் திருக்கரங்களால், பிரதிஷ்டை செய்யப்பட்ட, முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் பெருமான் கோவிலின் புனரமைப்பு பணி, சமீபத்தில் நிறைவடைந்தது.இதையடுத்து, நேற்று நான்காம் கால யாகபூஜை, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தது. விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, காலை, 8:30 மணிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.