உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலத்தூர் முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஆலத்தூர் முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஆலத்துார்;முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்போரூர் அடுத்த ஆலத்துார் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. சில மாதங்களாக இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.தொடர்ந்து, 29ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 5:30 மணிக்கு நான்காவது கால யாக பூஜைகளுடன் நிறைவு பெற்றது. பூஜிக்கப்பட்ட புனித நீர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 8:30 மணிக்கு விமான கலச கும்பாபிஷேகமும், தொடர்ந்து விநாயகர், மூலவர் முத்துமாரியம்மன், நவகிரகங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !