பழநியில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :3286 days ago
பழநி: ஞாயிறு விடுமுறை, சுபமூகூர்த்த தினத்தில் பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்தனர். பழநி மலைக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வெளியூர் பக்தர்கள் வருகைதருகின்றனர். ஞாயிறு பொதுவிடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்றுமுன்தினம் முதல் மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தது. பக்தர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதைப்போல தங்கரதபுறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.