மகாளயபட்சம் வந்தாச்சு!
ADDED :2990 days ago
புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள நாட்கள் மகாளயபட்சம் எனப்படும். இந்நாட்களில் பிதுர் உலகிலுள்ள முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க பூமிக்கு வருகின்றனர். தினமும் விரதமிருந்து முன்னோரை வழிபட வேண்டும். கடைசி நாளான அமாவாசையன்று படையல் வைத்து அன்ன தானம் அளிப்பது நல்லது. காலையில் பசுக்களுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுக்கலாம். மதிய உணவுக்கு முன், காகத்திற்கு சோறிடலாம். முடிந்தவர்கள் ஏதாவது ஒரு நாளில் ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி கடற்கரையிலோ, கங்கை (காசி), தாமிரபரணி (பாபநாசம்), காவிரி (திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) நதிக்கரைகளிலோ தர்ப்பணம் செய்யலாம். இந்த ஆண்டு செப்.6 முதல் செப்.19 வரை மகாளயபட்சம் வருகிறது.