உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருட்பா அல்ல!

மருட்பா அல்ல!

இராமலிங்க வள்ளலார் அருளிய திருவருட்பாவை இன்று எல்லோரும் படித்து இன்புறுகிறோம். அன்று தமிழறிஞர் கதிரைவேல் பிள்ளை தலைமையில் ஓர் அறிஞர் கூட்டம், அருட்பா ஆபாசம் நிறைந்த மருட்பா என்று வாதிட்டு பிரச்சாரம் செய்தது! இந்த விதண்டாவாதத்தை சகித்துக் கொள்ளாத ஒரு முஸ்லிம் பாவலர். ஆதாரத்தோடு பதில் சொல்லி நாடெங்கும் சென்று, அருட்பா... அருட்பாவே! மருட்பா இல்லை என்று தமது வாதத்தை நிலைநாட்டினார். இதை கண்ட காஞ்சி நகரப் பெருமக்கள் அவரை யானை மீதேற்றி நகர வீதிகளில் அழைத்து வந்து, பெரிய கோயிலில் பூரண கும்ப மரியாதை அளித்து, பிரசங்கக் களஞ்சியம் என்ற பட்டம் சூட்டி பெருமை அளித்தனர்! அந்த அறிஞர் வேறு யாருமல்ல, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பாவலர் செய்குத் தம்பி! இவர் ஒரு சதாவதானி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !