உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமணரின் முதல் உபதேசம்!

ரமணரின் முதல் உபதேசம்!

ரமணர் மதுரையை விட்டு திருவண்ணாமலை அடைந்து சுமார் 8 வருடங்களுக்குப் பிறகுதான் அவர் இருப்பிடம் தாயார் அழகம்மையாருக்குத் தெரிந்தது. 1898கிறிஸ்துமஸ் விடுமுறையில், தன் முதல் மகன் நாகசாமியுடன் வந்து பகவானைப் பவளக் குன்றில் சந்தித்தார். நீ கோவணாண்டியாக பிச்சையெடுத்து உண்ணவோ, உன்னை நான் ஊட்டி வளர்த்தேன்! மறுபடி மதுரைக்கே வந்து விடு என்று தாய்க்கே உரிய உரிமையோடு மன்றாடினார். பகவான் ரமணர் கற்சிலை போல் பதிலொன்றும் கூறவில்லை. சுற்றியிருந்தவர்களிடம் முறையிட்டார். அழகம்மை, அருகிலிருந்த பச்சையப்ப பிள்ளை, பகவானை நோக்கி, குறைந்தபட்சம் உண்டு  இல்லை என்று ஒரு வார்த்தை கூறலாகாதா? அல்லது எழுதியாவது ஒரு பதில் தரக்கூடாதா? என்று பிரார்த்தித்தார். அதற்கு இணங்கி, பகவான் தன் கருத்தை எழுதிக் காட்டினார். ரமணரின் முதல் உபதேசம் இதுவே. பகவானின் முதல் உபதேசத்தை பெறும் பாக்கியம் அவர் அன்னைக்கே கிடைத்தது. அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என தடை செய்யினும் நில்லாது; இதுவே திண்ணம். ஆகலின் மவுனமாய் இருக்கை நன்று என்பதே அந்த முதல் உபதேசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !