களிமண் கணபதி
ADDED :3013 days ago
விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைப்பதற்கு அறிவியல் பூர்வமான உண்மை ஒன்று உண்டு. ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மண்களைக் கரைய விடும். ஆற்று நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலில் கலக்கும். ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளைக் களிமண்ணால் செய்து ஐந்து நாட்களுக்குப் பிறகு ஆற்றில் கரைப்பது நம் முன்னோர் வழக்கம். இதனால், காய்ந்த களிமண் ஆற்றில் வரும் நீரைச் சேமித்து நிலத்தடி நீராக மாற்றும். அதுவே நமக்குக் குடிநீராகும். எவ்வளவு அற்புதமான அறிவுபூர்வமான செயல்?