உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் பாபா சன்னதியில் பவுர்ணமி பூஜை

சாய் பாபா சன்னதியில் பவுர்ணமி பூஜை

ஊத்துக்கோட்டை: சாய்பாபா சன்னதியில் நடந்த பவுர்ணமி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது சாய் பாபா சன்னதி. பக்தர்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட மூலவர் மற்றும் உற்வசருக்கு, பவுர்ணமி நாளையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் எடுத்து வந்த பால், மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக பக்தர்களின், பஜனை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !