உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தி கோஷங்களுடன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பக்தி கோஷங்களுடன் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 108 திருப்படிகள், அறுபடைவீடு மண்டபங்கள், 3 ராஜகோபுரங்கள், மகா மண்டபம், அர்த்த மண்டபம், சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில், 40 அடி முருகன் திருவுருவச்சிலை, குகை சித்தி விநாயகர், காளியம்மன், ஜலகண்டீஸ்வர சுவாமி கோவில்கள் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.கடந்த 27ம் தேதி காலை 8.30 மணிக்கு வினாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு வேததிருமுறை பாராயணத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நாடிசந்தானம், 4ம் கால வேள்வி, திரவிய சமர்ப்பணம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9.05 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.45 மணியளவில் விமான கலச மகா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேம் நடந்தது. ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், நகராட்சி தலைவர் சத்தியபாமா, துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கவுன்சிலர் சம்பத், கோவை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் ஆறுமுகம், செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் சீனிவாசன், கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்தம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலை வகித்தனர். காலை 11.00 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடந்தது.ஊட்டி நகர இந்து முன்னணி சார்பில், 250 கிலோ பஞ்சாமிருதம், 100 கிலோ திருநீறு, குங்குமம் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மகா கும்பாபிஷேக குழுவினர், திருப்பணி உபயதாரர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !