மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2961 days ago
கொடுமுடி: கருக்கம்பாளையம், மகா மாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கொடுமுடி தாலுகா, வள்ளிபுரம் ஊராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. வளாகத்தில் பகவதி அம்மன், விநாயகர், கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மகா மாரியம்மன் கோவில் அருகே, மேட்டுக்களம் கோவில் புதூரில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணி நிறைவடைந்த நிலையில், கடந்த, 5 மாலை யாக சாலை பூஜை நடந்தது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை தொடர்ந்து, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் கும்பாபி?ஷக விழாவில் கலந்து கொண்டனர்.