மாகாளியம்மன் - சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2961 days ago
பவானி: பவானி, பச்சப்பாளி, சாணார்பாளையத்தில் உள்ள விநாயகர், மாகாளியம்மன் மற்றும் சக்திமாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா, கடந்த, 3ல், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 4ல், புனித நீர் எடுத்து வருதல், முளைப்பாளிகை அழைத்தல், முதல் கால பூஜை நடத்திய பின் பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணியளவில் மாகாளியம்மன், சக்தி மாரியம்மன் கோபுர கலங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. சித்தோடு, நல்லாக்கவுண்டன்பாளையம், பச்சப்பாளி, சாணார்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.