உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெட்டமலை ஒண்டி கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ரெட்டமலை ஒண்டி கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணராயபுரம்: ரெட்டமலை ஒண்டி கருப்புசாமி உருவச்சிலை மற்றும் குதிரை வாகனத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் பாப்பக்காப்பட்டி கிராமத்தில், புதிதாக ஒண்டி கருப்புசாமி சிலையும், குதிரை வாகனமும் கட்டப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் துவங்கின. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து, நேற்று காலை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பாப்பக்காப்பட்டி, எட்டரை கோப்பு, மைலாடி, மேட்டுப்பட்டி, பெரிய மலையாண்டிப்பட்டி, விராலிக்காடு மற்றும் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !