உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் சத்திரங்கள் மீட்கப்படுமா?

திருக்கழுக்குன்றத்தில் சத்திரங்கள் மீட்கப்படுமா?

திருக்கழுக்குன்றம்: பல ஆண்டுகளுக்கு முன் பாரம்பரியமாக இருந்த சத்திரங்களை, பக்தர்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற சிவ தலமாக வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. மேலும், நான்கு வேதங்கள் மற்றும் சமயக்குரவர் நால்வரால் பாடல்பெற்ற தலமாகவும் உள்ளது.கோவில் நகரமான இவ்வூருக்கு, அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் காசி, ராமேஸ்வரம் செல்லும் புனித பயணியர் வருவதுண்டு. முக்கிய விழா நாட்களில், இங்கு நாள் கணக்கில் தங்கி, சிவபெருமானை வழிபட்டு செல்வர். அவ்வாறு தங்கும் பக்தர்களுக்கு, திருக்கழுக்குன்றம் பகுதியில், 60க்கும் மேற்பட்ட சத்திரங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் பயன்படுத்திய அந்த சத்திரங்கள், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் பராமரிப்பும் இன்றி காணப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், இது போன்று அழிந்துபோன, பாரம்பரியமிக்க சத்திரங்களை அடையாளம் கண்டு, அவற்றை பாதுகாக்கவும், மீட்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !