பெரியபட்டினத்தில் நாளை சந்தனக்கூடு
ADDED :3011 days ago
கீழக்கரை, பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 116ம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் கடந்த ஆக., 29 மாலை நடந்தது. செப்.,8 அன்று மாலை முதல் நள்ளிரவு 10:00 மணி வரை மவுலீது எனும் புகழ்மாலை ஓதும் நிகழ்ச்சியும் பின்னர், சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மறுநாள் செப்., 9.00 (சனிக்கிழமை) நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின் வழியாக குதிரைகள், யானை முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு பல்லக்கினை சுமந்து மகான் செய்யதலி தர்காவை மூன்று முறை வலம் வந்து புனித சந்தனத்தை அடக்க ஸ்தலத்தில் பூசி,பச்சை போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. கொடியிறக்கம் வரும் செப்., 17 ல் நடைபெறுகிறது.