உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் துவக்கம்

செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் துவக்கம்

பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 121-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்காட்டில் இரண்டு நாள் சங்கீத உற்சவம் நாளை (செப்8ல்) துவங்குகிறது. பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், நாளை (செப்8ல்) காலை, 11:30 மணிக்கு கேரள கலாசார துறை அமைச்சர் பாலன், விழாவை துவக்கி வைக்கிறார். சங்கீத நாடக அகாடமி செயலர், ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மதியம், 12:15க்கு குடமாளூர் ஜனார்த்தனன் குழுவினரின் புல்லாங்குழல் கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 11:30 மணிக்கு செம்பை வித்யாபீடத்தின், 32-வது ஆண்டு மாநாட்டை, ஆலத்துார், எம்.பி., - பிஜு துவக்கி வைக்கிறார். கலாமண்டலம் பதிவாளர் சுரேந்திரன் பேசுகிறார். மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது. இரண்டு நாட்களிலும் நடக்கும் சங்கீத ஆராதனையில், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை செம்பை வித்யா பீடம் தலைவர், செம்பை ஸ்ரீனிவாசன், துணைத் தலைவர், சுரேஷ், செயலர் முருகன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !